BREAKING NEWS

தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கு இரண்டாவது நாளாக எரிந்து வருவதால் எழுந்துள்ள புகை மூட்டத்தினால் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தஞ்சை மாநகராட்சி குப்பை கிடங்கு இரண்டாவது நாளாக எரிந்து வருவதால் எழுந்துள்ள புகை மூட்டத்தினால் பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் ஜெபமாலைப்புரம் மாநகராட்சி குப்பை கிடங்கு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது இதை அடுத்து 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் 20 குடிநீர் லாரிகள் மூலம் தீயணைக்கும் பணி நடைபெற்று வந்தாலும்,

இதுவரை தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை இரண்டாவது நாளாக குப்பை கிடங்கு எரிந்து வருகிறது இதிலிருந்து எழும்பியுள்ள புகை மூட்டம் ஆனது செக்கடி, மேல அலங்கம்,, கீழ வீதி, கீழவாசல் உள்பட மாநகரத்தில் பாதி பகுதி புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளது இந்த பகுதியில் உள்ள பள்ளிகளிலும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால் மாணவ மாணவிகளும் கண் எரிச்சலால் அவதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தீ விபத்தில் வீடுகள் எரிந்து பாதிக்கப்பட்ட மக்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேயர் சன் ராமநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரண உதவிகளை வழங்கினர்.

 

பள்ளி மாணவ மாணவிகள் புகை மூட்டத்தில் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்யும்படி முதன்மை கல்வி அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார் மேலும் இந்த குப்பை கிடங்கு இன்னும் மூன்று மாதங்களில் முழுமையாக குப்பைகள் அகற்றப்பட உள்ளதாக மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் அன்புமணி மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )