தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மணிகண்டன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் மேயர் சண்.ராமநாதன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் கூட்ட அறையில் சலசலப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்ட அறையில் மாதம் தோறும் நடைபெறும் சாதாரண கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் எதிர்கட்சி தலைவரும், அதிமுக கொரடாவுமான மணிகண்டன் ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பை சேமிப்பு கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. தீயில் இருந்து வரும் புகையால் பொது மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர் மேலும், 51 வார்டுகளிலும் குப்பைகள் அகற்றாமல் தேக்கம் அடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதனால் மேயருக்கும், எதிர்கட்சி தலைவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது ஒரு கட்டத்தில் மேயர் பதில் அளிக்க முடியாமல் தடுமாறி இருக்கையில் இருந்து எழுந்து கூட்ட அறையை விட்டு வெளியேறினார். தனி பெரும் பலத்துடன் உறுப்பினர்களை வைத்து இருக்கும் மேயர் கூட்டத்தை தொடர்ந்து நடத்தாமல் 6 உறுப்பினர்களை கொண்டு உள்ள எதிர்கட்சியினர் கேள்விக்கு பதில் அளிக்காமல் மேயரே கூட்டத்தில் இருந்தங் வெளிநடப்பு செய்தது மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
