தஞ்சை மாநகர கோட்டை பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தீர்மானம்.
தஞ்சை மேலவீதியில் மாநகர கோட்டை பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கோட்டை பகுதி அவைத்தலைவர் தாமஸ் அன்பழகன் தலைமை தாங்கினார். கோட்டை பகுதி செயலாளர் மேத்தா வரவேற்றார்.
மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ , மேயரும் மாநகர செயலாளருமான சண். ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உபயதுல்லா, து.செல்வம், மாவட்ட அவைத் தலைவர் இறைவன்,
பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணிய மூர்த்தி, தர்மராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டத் துணைச் செயலாளர்கள் மணிமாறன், புண்ணியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவராக மீண்டும் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. காமராஜ் மார்க்கெட்டை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த முதலமைச்சர் மு .க. ஸ்டாலினுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
நாளை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும், கோட்டை பகுதி சார்பில் அனைத்து வார்டுகளிலும் கழகக் கொடியேற்றி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும், கோட்டைப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும்,
வாக்கு சாவடி முகவர்கள் நியமிப்பது, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய பாடுவது, கோட்டை பகுதிக்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் இளைஞர்களை அதிகளவில் உறுப்பினர்களாக சேர்க்க பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநகர துணை செயலாளர் உஷா, மாநகர பொருளாளர் காளையார் சரவணன், பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், நீலகண்டன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி பொருளாளர் சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.