தஞ்சை மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டம், இன்று நடைபெற்றது.
நவம்பர் 1ம் தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்து, மாநகர சபை கூட்டத்தை நடத்த உத்தரவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும்,
மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்கள் சேர்த்தல் பணியை மாநிலத்திற்க்கே முன்மாதிரியாக சிறப்பாக மேற்கொள்வது என 3000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தஞ்சை மத்திய மாவட்டம், மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டம், மாநகர திமுக அவைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடைபெற்றது.
தஞ்சை மாநகர திமுக செயலாளரும், தஞ்சை மேயருமான சண்.இராமநாதன் வரவேற்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி .கே. ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில்..,
நாளைய தினம் நவம்பர் 1ம் தேதி அன்று உள்ளாட்சி தினமாக அறிவித்து, மாநகர சபை கூட்டத்தை நடத்த உத்தரவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், நவம்பர் 27ம் தேதி அன்று மாநில இளைஞரணி திமுக செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை மாநகரத்துக்கு உட்பட்ட 51 வட்டங்களிலும் திமுக இரு வண்ணக் கொடியை ஏற்றுவது என்றும்,
இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்களை சேர்க்கும் பணியை, மாநிலத்திற்கே முன்மாதிரியாக மேற்கொள்வது என்றும், 51 வட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் இறைவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், கனகவல்லி பாலாஜி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வம்,
பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, தர்மராஜன், மற்றும் பகுதி கழக செயலாளர்கள், அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட மாவட்ட அணி அமைப்பாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 3000 க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.