BREAKING NEWS

தஞ்சை மாநகர மேம்பாட்டுக்கு ரூ.ஆயிரத்து 112 கோடியில் திட்ட மதிப்பீடு-மேயர் சண்.ராமநாதன்.

தஞ்சை மாநகர மேம்பாட்டுக்கு ரூ.ஆயிரத்து 112 கோடியில் திட்ட மதிப்பீடு-மேயர் சண்.ராமநாதன்.

தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவதை முன்னிட்டு மேயர் சண்.ராமநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் பேட்டியளித்ததாவது, ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கு 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இவற்றில் 10 ஏக்கரில் குப்பைகள் தரம்பிரிக்கப் பட்டு அகற்றப்பட்டுள்ளது. இன்னும் 10 ஏக்கரில் குப் பைகள் அகற்றும் பணி விரைவாக முடிவடையும்.

 

இந்த இடத்தில் 10 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். மீதமுள்ள 10 ஏக்கரில் தஞ்சைபெரியகோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்க யாத்ரிநிவாஸ்
கட்டப்படும் நம்ம வார்டு, நம்ம மேயர் என்ற திட்டத்தில் ரூ.ஆயிரத்து 112 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.

 

இதுவரை பணிகள் மேற்கொள்ளரூ.40 கோடிஒதுக்கப் பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சியில் பிரசவ காலத்தின்போது தாய் சேய் உயிரிழப்புகள் இருக்கக் கூடாது என்கிற அடிப்படையில், தமிழகத்தில் முதன்முறையாக கண்காணிப்பு மையம் தொடங் கப்பட்டுள்ளது.

நமக்கு நாமே திட்ட செயல்பாட்டில் தமிழகத்திலேயே முதன்மையான மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சி திகழ்கிறது. வரிவசூலிலும் முதலிடத்தில் உள்ளோம். கடன் இல்லாத மாநகராட்சி என்றால் தமிழகத்திலேயே தஞ்சை மாநகராட்சி மட்டுமே உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 112 பணிகள் எடுக்கப்பட்டு, இதுவரை 92 பணிகள் நிறைவடைந்துள்ளன.

 

மீதமுள்ள 20 பணிகள் இன்னும் 4 மாதங்களில் முடிக்கப்படும். சிவகங்கை பூங்கா சீரமைப்பு பணி இன்னும் 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும். புதிய பஸ் ஸ்டாண்ட் புனரமைப்புக்காக ரூ.50 கோடியும், மீன்மார்க்கெட் கட்ட ரூ.35 கோடியும், சீனிவாசபுரம் டிபிஎஸ் நகரை இணைக்கும் வகையில் ரூ.120 கோடியில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்ப டும் என்ற நம்பிக்கை உள்ளது என மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

 

CATEGORIES
TAGS