BREAKING NEWS

தஞ்சை மாவட்டத்தில் கந்துவட்டி வழக்கில் அய்யப்பன் மற்றும் மல்லிகா ஆகிய 2 பேர் கைது போலீசார் நடவடிக்கை

தஞ்சை மாவட்டத்தில் கந்துவட்டி வழக்கில் அய்யப்பன் மற்றும் மல்லிகா ஆகிய  2 பேர் கைது போலீசார் நடவடிக்கை

தமிழகத்தில் ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின் படி தஞ்சை மாவட்டத்தில் கந்துவட்டி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த ஆரியப்படைவீடு பகுதியை சேர்ந்த சந்தானதேவி என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் ரூ ஒரு லட்சம் கடன் பெற்று அதற்கு வட்டியாக ரூ 60 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார் இந்நிலையில் மேலும் பணம் கேட்டு ஐயப்பன் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக சந்தான தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தனர் அதேபோல் தஞ்சை மாதாக் கோட்டையை சேர்ந்த உமா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவரிடமிருந்து இருந்து ரூ ஒரு லட்சம் கடன் பெற்று அதற்கான வட்டியும் செலுத்தியுள்ளார் மேற்கொண்டு மல்லிகா பணம் கேட்டு மிரட்டியுள்ளார் இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை கைது செய்தனர் தஞ்சை மாவட்டத்தில் கந்துவட்டி வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )