தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி, நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 70 ஆயிரம் ஏக்கர் மேல் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகும் நெல் சாகுபடி நடைபெறும்.
வழக்கமாக டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும்.
தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து மே மாதமே பாசனத்துக்காக முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் குறுவை சாகுபடி அதிக அளவு நடைபெறும் எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி அதிக அளவாக ஒரு லட்சத்து 86 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிந்துள்ளன.
இதை எடுத்து சம்பா தாளடி சாகுபடிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை, ஒரத்தநாடு, அம்மாபேட்டை, திருவையாறு பகுதியில் சம்பா தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தின் மூன்று லட்சத்து 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா ,தாளடி சாகுபடி இலககு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது வரை 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நடு பணிகள் முடிவடைந்துள்ளன.
மேலும் நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சம்பா ,தாளடி நடவு பணிகள் சற்று பாதிக்கப்பட்டன. தற்போது வெயில் அடிக்க தொடங்கியுள்ளதால் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குறுவைப் போல இந்த ஆண்டும் சம்பா தாளடி சாகுபடி இலக்கை தாண்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குத் தேவையான விதை நெல், உரம் மற்றும் வேளாண் இடுப்பு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.