தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழை
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழை.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழை – வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது – பொதுமக்கள் மகிழ்ச்சி.
தஞ்சை மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று அடித்து வந்தது. இந்நிலையில் மாலை முதல் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
தஞ்சாவூர், திருவையாறு செங்கிப்பட்டி பூதலூர் கல்லணை அய்யம்பேட்டை அம்மாபேட்டை ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடைகாலத்தில் டெல்டா பகுதியில் மழை பெய்ததால் சம்பா சாகுபடி செய்ய உள்ள நிலையில் விவசாயிகளுக்கு இது தேவையான மழையாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.