BREAKING NEWS

தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, மண்வளத்தை பாதுகாக்க ஜூலை 19 தஞ்சையில் ஆர்ப்பாட்டம்! ஏ ஐ டி யூ சி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு!!

தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, மண்வளத்தை பாதுகாக்க  ஜூலை 19  தஞ்சையில் ஆர்ப்பாட்டம்! ஏ ஐ டி யூ சி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு!!

ஏஐடி யூசி தஞ்சாவூர் மாவட்ட பொதுக் குழு கூட்டம் தஞ்சாவூர் ஏஐடியூசி கூட்ட அரங்கில் இன்று 2-7-22 காலை 11 மணிக்கு மாவட்ட தலைவர் வெ. சேவையா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் சி. சந்திரகுமார் மாநில முடிவுகள் குறித்து உரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் நடந்துள்ள பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், உடல் உழைப்பு சங்க மாவட்ட பொதுச் செயலாளர் தி.கோவிந்தராஜன், கட்டுமான சங்க நிர்வாகிகள் சீனி.சுகுமாறன், பி.செல்வம், ஆர்.சேகர், பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் ஜி.மணி மூர்த்தி, மின்சார சம்மேளன மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், மாவட்ட நிர்வாகி சி.தண்டபாணி, உடலுப்பு சங்க மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சங்க நிர்வாகிகள் எஸ்.தியாகராஜன், எஸ்.ஞானசேகரன், சுமை சங்க நிர்வாகி கே.எஸ் .முருகேசன், அரசு போக்குவரத்து சங்க தலைவர் டி.தங்கராசு , ஓய்வு பெற்றோர்.

சங்க துணை தலைவர் எம்.மாணிக்கம் , தெரு வியாபார சங்க மாநில பொருளாளர் ஆர். பி.முத்துக்குமரன், மாவட்ட தலைவர் பி.சிவக்குமார், பண்ணை சங்க மாநில துணைத் தலைவர் தி.திருநாவுக்கரசு, டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் எஸ்.கோடீஸ்வரன், என். செழியன், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் த.பாஸ்கர், ஆட்டோ சங்கம் மாவட்ட செயலாளர் ஆர்.செந்தில்நாதன், மீனவர் சங்க மாவட்ட செயலாளர் என்.காளிதாஸ், உழைக்கும் பெண்கள் சங்க செயலாளர் எஸ்.பரிமளா, கும்பகோணம் கேன் வாட்டர் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் மணல் குவாரிகளில் விதிமுறைகளுக்கு புறம்பாக, பர்மிட் முறையில் முறைகேடு செய்து மணல் கொள்ளை கடுமையாக நடைபெறுகிறது. அரசுக்கு செலுத்துகின்ற தொகையை விட பல மடங்கு அதிகமாக மணல் விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு லாரிக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் இடை கொள்ளை அடிக்கப்படுகிறது. தஞ்சாவூரில் இருந்து லாரிகளில்பெரிய அளவிற்கு மணல் எடுத்துச் செல்வதால் மண் வளம் முழுதுமாக பாதிக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கொள்ளையை தடுத்திடவும், குவாரிகளை முறையாக செயல்படுத்தவும் கண்காணிப்பு குழு அமைப்பதுடன், அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதிகளவு மணல் எடுப்பதை தடுத்து, கட்டுப்படுத்தி மண்வளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கை வலியுறுத்தி ஜூலை 19ஆம் தேதி தஞ்சை ரயிலடி முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது, மாரியம்மன் கோயில் அருகில் உள்ள சமுத்திர ஏரி சுற்றுலா தளமாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்துவதற்கு பதிலாக , மண் கொண்டு ஏரி தூர்க்கப்பட்டு குட்டை போல் காட்சியளிக்கிறது. ஆங்காங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.

எனவே ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஏரியை அகலப்படுத்தி ஆழப்படுத்திடும் வகையில் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம், சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்களுக்கும் கண்மூடித்தனமாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. உடனடியாக ஒன்றிய அரசு நடைமுறைக்கு பொருத்தமற்ற சாதாரண மக்களை பாதிக்கின்ற வரி விதிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டுகிறோம் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )