தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே நெற்றியில் பெரிய கட்டியுடன் அவதிப்படும் சிறுவனுக்கு நிவாரண உதவி.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே உள்ள சோமேஸ்வரபுரம் கிராமம் மேலதெருவை சேர்ந்தவர் வாசுதேவன் -பூஜா தம்பதியினர் கூலி தொழிலாளியான இவருக்கு ஆதேஷ் ( வயது 5 ) அனிருத் ( வயது 2 ) ஆகிய இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆதேஷ் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 -ம் வகுப்பு படித்து வருகிறான்.
சிறுவன் ஆதேஷ் பிறந்தது முதல் நெற்றியில் சிறிய கட்டி இருந்த நிலையில் அவன் வளர வளர பெரிய அளவில் நெற்றியில் கட்டியுடன் அவதிப்பட்டு வருகிறான் குழந்தையாக இருக்கும்போதே அவனுக்கு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யப்பட்டது.
ஆனால் இந்த கட்டி அப்படியே உள்ளது. எனவே இந்த கட்டியை அகற்றுவதற்கு அதே தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவாகும் என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே சிறுவனின் தந்தை வாசுதேவன் கடந்த ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி தற்போது கால் சரி வர நடக்க முடியாத நிலையில் உள்ளார்.
எனவே சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர் அதன்படி இதனையறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ( ஜோதி அறக்கட்டளை) ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள், அரிசி, பருப்பு, காய்கறி ஆகிய நிவாரண பொருட்களை உதவியாக வழங்கினர். மேலும் அறுவை சிகிச்சை செய்ய தேவையான உதவிகளையும் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.