BREAKING NEWS

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் நன்றாக மழை பெய்திடவும், உரிய காவிரி நீர் கிடைத்து விவசாயம் செழித்திடவும், 500 க்கும் மேற்பட்ட பெண்களின் முளைப்பாரி ஊர்வலம் சிலம்பாட்டம், கும்மியாட்டத்துடன், தாரை தப்பட்டை முழங்க வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஒரத்தநாடில் பிரசித்திப் பெற்ற காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயம் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த ஆலயம்

காலத்தால் சிதிலமடைந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு, கோபுரங்கள் வர்ணம் தீட்டப்பட்டு வரும் 13 ம் தேதி காலையில் விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கிய நிலையில்,

இதில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் நவ தானியங்களை முளைக்க வைத்து, ஊர் வளம் பெறவும், விவசாயம் செழித்து பசி பட்டினி இல்லாமலும், அனைத்து மக்களும் நோய் இல்லாமல் வாழவும் சிறப்பு வழிபாடு செய்து, பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று ஆலயத்தை அடைந்தனர்.

தொடர்ந்து 13 ம் தேதி காலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றதும் காசி விசாலாட்சி அம்மன், காசி விசுவநாதர் ஆலயத்திற்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )