BREAKING NEWS

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி புகைப்படங்களுடன் வந்து பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி புகைப்படங்களுடன் வந்து பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தஞ்சை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் சொந்த மாவட்டமான தஞ்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி புகைப்படங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது டெல்டா அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுக்குழு வருகிற 11-ம் தேதி பரபரப்பான சூழ்நிலையில் மீண்டும் கூட உள்ளது அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்த்துள்ள நிலையில் அவரது சொந்த மாவட்டமான தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் எடப்பாடி கே பழனிச்சாமி புகைப்படங்களுடன் வந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களில் 80 சதவீத பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளதாகவும் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 10 பொதுக்குழு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் நூறு சதவீத ஆதரவு ஏற்பட்டுள்ளதாகவும் டெல்டா பகுதிகளில் குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்த கொடுத்ததால் டெல்டா பகுதியினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு ஆதரவு தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )