தஞ்சை மாவட்ட ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாக பால்வளத் தலைவர் காந்தி(அதிமுக) குற்றச்சாட்டு.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக (இபிஎஸ்அணி) தஞ்சை ஒன்றிய கழகம் சார்பில் நாஞ்சிக் கோட்டை ஊராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வரி உயர்வை திரும்ப வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டன கோஷமிட்டனர் முன்னதாக பால்வளத் தலைவர் காந்தி பேசும்போது, ஆவின் நிறுவனத்தில் அதிமுக அரசு இருந்தவரையில் 14 கோடி ரூபாய் வைப்புத்தொகை வங்கியில் வைத்திருந்ததாகவும் தற்போது என்ன இருக்கின்றது என்றும்,
ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது அதற்குக் காரணம் திமுக அரசு என்றும், ஆவின் நிறுவனத்திற்கான பால் இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டி பேசினார், இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.