தஞ்சை மேற்கு போலீசார் காந்திபுரம் முனியாண்டவர் கோவில் அருகே சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்தனர்.

தஞ்சை காந்திபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சோதனைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர். ஆனால் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
அதில் அவர்கள் தஞ்சை சிங்கபெருமாள் கோவில் குளம் வடகரை ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவரின் மகன் சூரியபிரகாஷ் (24), காந்திபுரத்தை சேர்ந்த சேகர் மகன் அஜித்குமார் (25) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியபிரகாஷ், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.