BREAKING NEWS

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.

தஞ்சை வடக்கு மாவட்ட வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பேச்சு.

தஞ்சை வடக்கு மாவட்ட மாணவர் அணி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் முகமது கலிபா, பிரகாஷ் ஆவியூர் முன்னிலை வகித்தனர்.

 

சிறப்பு அழைப்பாளராக கல்யாண சுந்தரம் எம்.பி, அன்பழகன்எம்எல்ஏ துணைமேகர் மேயர் சுப தமிழழகன் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர் பேசியதாவது:-

 

 

கடவுள் வழிபாடு சமஸ்கிருதம் மொழிக்காக தினமும் ரூ.55 லட்சம் மத்திய அரசு செலவு செய்து வருகிறது.ஆனால் செம்மொழி தமிழக்கு ரூ.3 லட்சம் வரை செலவு செய்து வருகிறது. அதிகாரம் மிக்க தினிப்பு மொழியாக இந்தியை மாற்றுவதால் இந்தியாவில் உள்ள மராத்தி மொழிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் அதன் தாய்மொழி அடையாளங்களை அழிந்து வருகின்றது.

 

தமிழர்கள் தமிழிலும், ஆங்கில மொழியும் கற்றதால் உலக முழுவதும் பரவி பரவசம் அடைந்தது. தமிழகத்தில் அனைத்து கடவுளுக்கும் அனுமதி உள்ளது பக்தி வேறு,அரசியல் வேறு என்பது தமிழர்களுக்கு தெரியும்.மதம் என்ற சிக்கலில் தமிழகர்கள் விழவில்லை அதனால் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் பல மத கலவரங்கள் ஏற்பட்டது.

 

ஆனால் தமிழகத்தில் ஏற்படவில்லை,இதற்கு பண்பாடுதான் காரணம், இந்த பண்பாடு வருவதற்க்கு காரணம் மொழிதான். மொழிகளுக்கு மிகப் பெரிய வரவலாறு இருக்கும். மொழியை இழந்தால் பண்பாடுகளும் அழிந்து விடும்.

 

ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்று வருவதால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன்,முத்துசெல்வம்,சுதாகர், நாசர், அண்ணாதுரை, உதயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS