தஞ்சை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா கருத்தரங்கம் – கி.வீரமணி பங்கேற்பு.
தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா மற்றும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் தத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் தஞ்சை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சசிகுமார் வரவேற்றார். சங்கத் தலைவர் அமர்சிங் தலைமை வகித்தார். சென்னை மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான வழக்கறிஞர் கி.வீரமணி கலந்துகொண்டு இந்திய அரசமைப்பு சட்டத்தின் தத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் நமச்சிவாயம், குப்புசாமி, மனோகரன், அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் விவியன் அசோக்,
முன்னாள் சிறப்பு வழக்கறிஞர் நாகராஜன், வழக்கறிஞர்கள் பழனியப்பன், ஜீவக்குமார், முத்து மாரியப்பன், வடிவேல், சித்தார்த்தன் மற்றும் சக வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வழக்கறிஞர்கள் சங்க இன செயலாளர் வித்யா நன்றி கூறினார். வழக்கறிஞர் பூவை.புலிகேசி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.