தடுத்தாட்கொண்டூர் ஊராட்சியில் மின்கம்பி அருந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி. அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது தடுத்தாட்கொண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சி சேர்ந்த பள்ளி மாணவர்கள் லோகேஷ், சப்தகிரி ஆகியோர் நேற்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக விவசாய நிலத்தில் சென்ற மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் லோகேஷ் சப்தகிரி சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இரு மாணவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று மாணவர்களின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தடுத்தாட்கொண்டூர் கிராமத்திற்கு நேரில் சென்று இறந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன் உடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.\