BREAKING NEWS

தடையில்லா இணையத்தள வசதி திறனை மேம்படுத்தி பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு செய்து கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் நுகர்வோர் நல சங்க தலைவர் வலியுறுத்தல்.

தடையில்லா இணையத்தள வசதி திறனை மேம்படுத்தி பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு செய்து கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் நுகர்வோர் நல சங்க தலைவர் வலியுறுத்தல்.

தமிழக முதல்வர்
மு.க ஸ்டாலின்,
பத்திரப்பதிவு துறை
அரசு செயலாளர் ஜோதிநிர்மலாசாமி,
பதிவுத்துறை தலைவர்
சிவன்அருள் ஆகியோருக்கு கும்பகோணம்
நுகர்வோர் நல சங்கம்
தலைவர் பாலாஜி கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-

தமிழக அரசால் 2018 ம் வருடம் பதிவுமுறை முற்றிலும் இணையதள பதிவு முறையாக மாற்றம் செய்யப்பட்டது .

அதில் கீழ்கண்ட குறைபாடுகளை களைய வேண்டுகிறோம் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட திட்டத்திற்கு அடிப்படை வசதிகள் சார்பதிவகங்களுக்கு முழுமையாக செய்து கொடுக்கப்படவேண்டும்,குறிப்பாக தடையில்லா இணையதளவசதி அதிவேகமாக செய்து கொடுக்கப்பட வேண்டும்.மேலும் பதிவு துறை சர்வர் மிகவும் மந்தநிலையில் இருந்து வருகிறது . இதனால் டோக்கன் சிஸ்டம் படி பதிவு செய்யமுடியாமல் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

காலை முன்பதிவு செய்தால் மதியம் வரை அலுவலகத்தில் காத்திருக்கிற நிலை உள்ளது . மதியம் முன்பதிவு செய்தால் இரவு 8 மணி வரை காத்திருக்கிற நிலை உள்ளது .

மேலும் கடந்த 21 ந் தேதியன்று சர்வர் கோளாறு காரணமாக காலை முதல் மாலை வரை ஒரு ஆவணம் கூட பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அனைவரும் நாள் முழுவதும் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள். இதனால் வயதானவர்கள், பெண்கள் மற்றும் வேலை பழு உள்ளவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மேற்படி தடையில்லா இணையத்தள வசதி திறனை மேம்படுத்தி பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு செய்து கொள்ள உரிய ஆணையை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )