BREAKING NEWS

தடை செய்த வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை – மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை.

தடை செய்த வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை – மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிபட்டினம்,கள்ளி வயல்தோட்டம், சேதுபா வாசத்திரம் பகுதியில் 157 விசைப்ப டகுகள் உள்ளது.

மீன்பிடி விசைப்படகுகள் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து தொடர்ச்சியாக மீன்பிடித் தொழில் செய்து வந்த நிலையில் தற்போது அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்,

மல்லிப்ப ட்டினம் மீன்பிடிதுறை முகம் மற்றும் சேதுபாச த்திரம் மீன்பிடி இறங்கு தளத்தில் தஞ்சாவூர்மீன்வ ளம் மற்றும் மீனவர்ந லத்துறை உதவிஇயக்கு னர்சிவக்குமார் தலைமை யில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வா ளர்ஆனந்த், கங்கேஸ்வரி, சார் ஆய்வாளர் காமராஜ், மற்றும் கடலோர சட்ட அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் நவநீதன்,

மீன்வள மேற்பார்வையாளர் சுரேஷ், கடல் மீன் பிடி சட்ட அமலாக்க பிரிவு ராஜா மற்றும் அலுவலர்களால் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் மற்றும் சேதுபாவாசத்திரம் விசைப்படகு சங்கநிர்வாகி களுடன் கூட்டம் நடத்தப்பட்டு அரசால் தடை செய்யப்பட்டமீன்பிடி வலைகளை பயன்படு த்தக் கூடாது எனவும் மீறி செயல்பட்டால்தமிழ்நாடு கடல் மீன்பிடி சட்ட விதிகளின்படி கடுமை யான நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )