தந்தை உயிரிழந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாணவி!!
தந்தை உயிரிழந்த நிலையிலும் தேர்வு எழுதிய மாணவி!!
தந்தை இறந்த நிலையில், மகள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் பரமக்குடி சுந்தரராஜபட்டினத்தைச் சேர்ந்தவர் ரவி என்ற ரவிச்சந்திரன்(52). இவருடைய மனைவி பவானி. இவர்களது ஒரே மகள் சுரேகா(வயது 17). இவர் பரமக்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவரது தந்தை உரப்புளி அங்காளபரமேஸ்வரி கோயிலில் மொட்டை போடும் பணி புரிந்து வருகிறார். வேலையில் இருந்தபோது நேற்று முன்தினம் ரவி மாரடைப்பால் உயிரிழந்தார்.சுரேகா, தான் படித்த பரமக்குடி அலங்கார மாத மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி வருகிறார். நேற்று மாணவி சுரேகா வணிகவியல் தேர்வு எழுத இருந்த நிலையில் தந்தை உயிரிழந்தார். இருந்தபோதும் சுரேகா சோகத்துடன் தேர்வுக்குச் சென்றார்.
இதற்கிடையே மாணவி சுரேகாவின் தந்தை இறந்த தகவல் அறிந்து பள்ளியில் அவரது தோழிகள், ஆசிரியைகள், பிளஸ்-2 தேர்வு எழுத சுரேகா வர மாட்டார் என்று நினைத்து இருந்தனர். அங்கு தேர்வு எழுத மாணவி சுரேகா வந்தவுடன், சக தோழிகள், ஆசிரியைகள் மாணவியின் கையை பிடித்து அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.அதன் பின்னர் மாணவி சுரேகா வணிகவியல் தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பினார். மாணவி வீடு திரும்பும் வரை காத்திருந்த உறவினர்கள் அதன் பிறகு இறுதி சடங்கு நடத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.