BREAKING NEWS

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுகிறது!

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை இன்றுடன் நிறைவு பெறுகிறது!

மாணவர்கள்

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இiன்று மட்டுமே அவகாசம். இன்று மாலையுடன் இலவச சேர்க்கைக்கான கால அவகாசம் நிறைவு பெறுகிறது.

இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களை இலவசமாகச் சேர்க்க விண்ணப்பிக்க நாளை கடைசி  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்று மே 25ம் தேதி கடைசி தேதி ஆகும்.

மத்திய அரசின் இலவசக் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 6 முதல் 14 வயதுக்குப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு கட்டாயக் கல்வி சட்டத்தை கொண்டுவந்தது.

அதன்படி, தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான செலவினங்களை அரசே செலுத்திவிடும்.

மாணவர்கள்

கடந்த 2010-ம் ஆண்டு நாடு முழுவதும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், தமிழக அரசு 2011-ம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், காலியான இடங்கள் குறித்தும், மாணவர்கள் சேர்க்கை குறித்தும் தனியார் பள்ளிகள் அறிவிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் இருந்து தனியார் பள்ளிகள் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த 2017-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கு அவகாசம் மே 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. முன்னதாக மே 18-ந் தேதி வரை விண்ணப்ப அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

விதிமுறைகள் என்ன?

பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில், சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் வின்னபித்த பெற்றோர்களுக்கு ஒப்புல் ரசீது தவறாது வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணையத்தில் மூலமாக பதிவேற்றம் செய்யலாம். இதுதவிர, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

பெற்றோர்கள் விண்ணப்பிக்க rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்யவும்.

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி சேர்க்கை வழங்கும் தனியார் பள்ளிகளின் விவரங்களைக் காண: https://rte.tnschools.gov.in/rte-schoollist

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )