தனியார் பள்ளி வேன் சிக்கிய குழந்தை உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் ரக்சன் வயது
1 1/2 குழந்தை வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காடாம்புலியூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் பள்ளி வேன் டயரில் சிக்கிய குழந்தை ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடியது இதனை அடுத்து குடும்பத்தினர் குழந்தையை மீட்டு
பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது
அப்போது அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை அடுத்து
குழந்தையின் பெற்றோர்கள் உறவினர்கள் கதறி அழுத
காட்சி பார்ப்போரை கண் கலங்க வைத்தது.
இந்த சம்பவம் குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.https://youtu.be/aFd0CO6bzfM