தமிழகத்திலேயே முதல் முறையாக பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கைப்பந்து போட்டி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
![தமிழகத்திலேயே முதல் முறையாக பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கைப்பந்து போட்டி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். தமிழகத்திலேயே முதல் முறையாக பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கைப்பந்து போட்டி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221019-WA0085.jpg)
தமிழகத்திலேயே முதல் முறையாக தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கைப்பந்து (கேன் பால்) போட்டி நேற்று தொடங்கப் பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து, ஓவ்வொரு வீரர்களுக்கும் கை கொடுத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார் வரவேற்றார்.
மாணவர்களுக்கான இப் போட்டியில் தஞ்சை மேக்ஸ்வெல் பள்ளி, பட்டுக்கோட்டை ஆக்ஸ்போர்ட் பள்ளி, பிள்ளையார்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளி உட்பட 27 பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 14 வயது, 17 வயது, 19 வயது என மூன்று பிரிவுகளாக மாணவர்கள் தனது திறமைகளை கையாண்டு விளையாடினர்.
பள்ளி தலைமை ஆசிரியை சாந்தா, உடற்கல்வி ஆய்வாளர் தேன்மொழி மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.