தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.2,877 கோடியில் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.2,877 கோடியில் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் தெரிவித்தார். தேனி இயக்குனர் ஆய்வு தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு செய்தார். அங்குள்ள தொழிற்பிரிவுகள், அலுவலகம், மாணவர்கள் வகுப்பறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.
தொழிற்பிரிவுகள் குறித்து பயிற்சியளித்தல் தொடர்பாக பயிற்றுனர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர், மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். முன்னதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. மேலும் 11 தொழிற்பயிற்சி நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட உள்ளன.
இங்கு 54 பொறியியல் பாடப்பிரிவுகள், 24 பொறியியல் அல்லாத இதர பாடப்பிரிவுகள் என 78 பாடப்பிரிவுகள் உள்ளன. ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் பயிற்சி முடித்து செல்கின்றனர்.புதிய தொழிற்பிரிவுகள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவர்களில் 89 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அதில், 75 சதவீதம் பேர் வளாக தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
வேலைவாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சிகள் மேலும் விரிவாக்கம் செய்யப்படும். தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.2 ஆயிரத்து 877 கோடி மதிப்பில் கணினி, ரோபோட்டிக் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, தேனி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன், நிலைய மேலாண்மைக்குழு தலைவர் அரவிந்த் மற்றும் பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.