BREAKING NEWS

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தான் அடிமைத்தனத்தை ஒழிக்க பாடுபட்டது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் குமார் பேச்சு.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தால் தான் அடிமைத்தனத்தை ஒழிக்க பாடுபட்டது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் குமார் பேச்சு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நடைபெற உள்ள திராவிட பயிற்சி பாசறை கருத்தரங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

 

கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை தாங்கிய பழனி சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ. பி. செந்தில்குமார் பேசியதாவது: –

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை நான் முதலில் இளைஞர் அணியில் தான் இருந்தேன். இளைஞர் அணி இன்றைய பாசறை கூட்டத்தில் திராவிடம் என்ற நிலைப்பாடு இருந்த ஒரே காரணத்தினால் தான் இன்றைய தமிழகம் விடுதலை பெற்று மிகப்பெரிய அறிவுடைமையான நிலைக்கு உயர்ந்து இருக்கிறது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் தான் காரணம் என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பேரறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தினுடைய இயக்கமான பெரியார் சிந்தனையாலும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட கழகத்தின் தலைவருமான ஐயா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவாலும், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் தான் என்பதை இந்த தருணத்தில் பதிவு செய்கிறேன்.

 

தமிழக மக்கள் அடிமை என்ற நிலையை மாறி சமத்துவம் என்ற நிலையை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இத்தருணத்தில் நான் உறுதிபடக் கூறுகிறேன் என ஆவேசமாக பேசினார்.

 

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கறிஞரும், தலைமை கழக பேச்சாளருமான அருள்மொழி, மாநிலவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சௌந்தரபாண்டியன் முருகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன் ,

 

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிலால் உசேன், நகர செயலாளர்கள் ஜோசப் கோவில், சின்னதுரை, விஜயகுமார் மற்றும்  

 

வத்தலகுண்டு, நிலக்கோட்டை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டம் முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துராஜா நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )