BREAKING NEWS

தமிழகத்தில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் மூடல் !!

தமிழகத்தில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் மூடல் !!

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களில் முண்ணனியில் இருப்பது போர்டு நிறுவனம்.  இந்நிறுவனம் உலகம் முழுவதும் அதன் கிளைகளை பரப்பியுள்ளது. இந்தியாவில் அதன் கிளைகள் படிப்படியாக மூடப்படும் என சென்ற ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.  அந்த வகையில் தமிழகத்தில் சென்னையில் மறைமலை நகரில் போர்டு கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

போர்டு

இந்நிறுவனம் தயாரிப்பை நிறுத்தினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது குறித்து தமிழக அரசு டாட்டா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது ஜூன் 30ம் தேதியுடன் மறைமலை நகரில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனமான போர்டு மூடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலையில் சுமார் 2500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இச்செய்தி  அங்கு பணிபுரியும் ஊழியர்களிடேயே பெரும் கவலையையும்,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக,ஃபோர்டு நிறுவனம் தனது நஷ்டத்தில் இருக்கும் இந்திய யூனிட்டை கைவிட்டு, மின்சார மற்றும் தானியங்கி வாகனங்களில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் இந்நிறுவனம் மூடப்பட உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )