தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அரிவித்துள்ளது. தற்போது நிலவி வரும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இன்று துவங்கி அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று மே 22ம் தேதி தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நாளை மே 23 திங்கட் கிழமை முதல் 25ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.