தமிழகத்தில் முதல் முறையாக தஞ்சை மாநகராட்சியில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரத்துடன் கூடிய நவீன கழிப்பறைகளை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் திறந்து வைத்தார்.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் நாப்கின் வழங்கும் இயந்திரத்துடன் கூடிய இரண்டு புதிய நவீன கட்டண கழிப்பிடம் கொண்டுவரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.
இந்த நவீன கட்டண கழிப்பறையை தஞ்சை மாநகர மேயர் சண்.இராமநாதன் திறந்துவைத்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் தஞ்சை மாநகராட்சியின் 4 கழிவறைகளில் தானியங்கி விதை வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதாகவும்,
32 மாநகராட்சி கழிப்பறைகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம் வைப்பதற்கான பொது ஏலம் கொண்டுவரப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது எனவும்,
மாநகராட்சியில் உள்ள 80 கழிப்பறைகளில் இதுபோன்று பெண்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் நாப்கின் வழங்கும் இயந்திரம் கொண்டு வரப்படும் எனவும் மாநகர மேயர் சன் இராமநாதன் தெரிவித்தார்.