தமிழகத்தில் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வலுக்கும் அக்னிபாத் போராட்டம்.

நாடு முழுவதும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புக்கள் கிளம்பி வருகின்றன. வட மாநிலங்களில் இதுவரை 12 ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளனர். இருவர் தற்கொலை செய்துள்ளனர். வன்முறைகளும், போராட்டஙகளும் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து தமிழமத்தில் சென்னையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத வண்ணம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் 150 போலீசார் என மொத்தம் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் அக்னிபத் என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பணிக்காலம் 4 ஆண்டுகள் முடிந்ததும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், 75 சதவிகிதம் பேர் பாதுகாப்பு படையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், போர் நினைவு சின்னம் அருகே 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிற மாநிலங்களில் நிகழ்ந்தது போல் தமிழகத்திலும் ரயில் நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சென்னை ரயில் நிலையங்கள் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
