BREAKING NEWS

தமிழகம் முழுவதும் 1,000 மழைமானிகள்!! அதிரடி உத்தரவு!!

தமிழகம் முழுவதும் 1,000 மழைமானிகள்!! அதிரடி உத்தரவு!!

மழைமானி

தமிழகத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நீர்வள ஆதாரங்களை கண்டறிய தானியங்கி மழைமானிகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பினால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்தம் 1,000 எண்ணிக்கையில் இயங்கக் கூடிய தானியங்கி மழைமானிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில், மாநிலத்தில் நீர்வள ஆதாரங்களை கண்டறிய உதவும் வகையில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உத்தரவு

இது குறித்து நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் உள்ள 34 ஆறுகளும், 17 ஆற்று வடிநிலங்களும், 127 உப விளை நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை மூலமாக சராசரி 439 மி.மீட்டர் மழையும், வடகிழக்கு பருவமழை மூலம் சராசரி 440 மி.மீட்டர் மழையும் தமிழகத்திற்கு கிடைத்து வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தமிழகத்தில் சராசரியாக 960 மி.மீட்டர் மழை பெய்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தானியங்கி மழைமானிகளைக் கொண்டு மேற்பரப்பு நீர் பற்றிய நிகழ்வு நேர தரவுகளை இதன் மூலம் சேகரித்து பயன்பெற முடியும்.எனவே தமிழகத்தில் உள்ள மொத்த அளவிலான 1,166 பிர்க்காக்களில் 1,000 பிர்காக்களில் ஏற்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. தானியங்கி மழை மானிகளை கொள்முதல் செய்யும்படியான தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை டெண்டர் வெளிப்படை தன்மை சட்டம் 2000-ன் கீழ் உள்ள நடைமுறைகளை பின்பற்றி தானியங்கி மழை மானிகளை கொள்முதல் செய்வது குறித்தும், நிறுவுதல் மற்றும் இயக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த அறிவிப்பினால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் முழு கவனம் செலுத்தி வரும் வேளையில், தற்போது மழைமானிகள் மூலம் விவசாயத்தை மேன்மேலும் அதிகரிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )