தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு ரேஷன் கடைகள் செயல்படாது!!
தமிழகம் முழுவதும் 4 நாட்களுக்கு ரேஷன் கடைகள் செயல்படாது!!
தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பணிபுரியும் பணியாளர்கள் 7 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வருகிற 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மொத்தம் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.அத்துடன் 10 தேதி ஊழியர்கள் ஒன்று திரண்டு தமிழக முதல்வரை நேரில் சந்திகக் இருப்பதாகவும் ரேஷன் கடைபணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நாகை மாவட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு பணியாளர்கள் சங்க போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்பிரமணியம் பங்கேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்கு பின்னர் கு.பாலசுப்பிரமணயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மாநிலம் முழுவதும் உள்ள அரசு பணியாளரகளை ஒன்று திரட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பதற்கான காத்திருப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் தமிழக அரசு பணியாளர்கள் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான 3 நாட்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக அரசு பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமப்படும் சூழ்நிலை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.