தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம்,
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, திருப்புறம்பியம் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான எஸ்.கே.முத்துசெல்வம், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர், ஒன்றிய குழு உறுப்பினர் தங்க.தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் வைஜெயந்தி சிலம்பரசன், துணை தலைவர் ஜி.கண்ணன், பகுதி திமுக செயலாளர் டி.கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர்கள், கிளை திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசியல்கும்பகோணம்தஞ்சாவூர் மாவட்டம்தமிழக அரசின் வருமுன் காப்போம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்புறம்பியம் ஊராட்சிமருத்துவம்