தமிழக அரசை கண்டித்து செங்கோட்டையில் பாஜக ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தென்காசி மாவட்டத்தில் நேற்று மொத்தம் 24 இடங்களில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில், தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு, செங்கோட்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், நகரத் தலைவர் வேம்புராஜ் தலைமையில், நகர பார்வையாளர் சீனிவாசன் முன்னிலையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சாரதா பாலகிருஷ்ணன், மாவட்ட அமைப்பு சாரா பிரிவு துணைத் தலைவர் பேச்சிமுத்து,
மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு தலைவர் பொண்ணுலிங்கம், மாவட்டச் செயலாளர் ஜமீன் முத்துக்குமார், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் செண்பகராஜன், நகர பொதுச்செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கோமதிநாயகம், நகர பொருளாளர் ராம்குமார்,
நகர துணைத் தலைவர் கணேசன், நகர செயலாளர்கள் உதயகுமார், முத்துமாரியப்பன், கணேசன், இளைஞர் அணி தலைவர் வீர சிவா, மகளிர் அணி தலைவி வேணி, விவசாய அணி தலைவர் ராமர், உள்ளாட்சி பிரிவு தலைவர் ஆறுமுக நைனார், அரசு தொடர்பு பிரிவு தலைவர் சரவணன், மீனவர் பிரிவு தலைவர் செல்வ மாரி,
நகர விளையாட்டு மட்டும் திறன் மேம்பாட்டு தலைவர் ராமகிருஷ்ணன், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் முருகன், முன்னாள் செயற்குழு உறுப்பினர் கல்யாண குமார், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர்கள் குருசாமி, முத்துமாரியப்பன். இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஸ்ரீராம் கார்த்திக், நகர செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.