BREAKING NEWS

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விஷயத்தில் நடிகர் வடிவேல் ஜோக்கை சொல்லி பேசிய முன்னாள் அமைச்சர் நிலக்கோட்டை.

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விஷயத்தில் நடிகர் வடிவேல் ஜோக்கை சொல்லி பேசிய முன்னாள் அமைச்சர் நிலக்கோட்டை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளபட்டி, சக்கையா நாயக்கனூர் ஆகிய 2 கிராமங்களில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும் பால் விலை உயர்வை கண்டித்தும் நடக்கும் தமிழக அரசின் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகப்பன் மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி ஆகியோர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். தேன்மொழி சேகர், திண்டுக்கல் முன்னாள் எம்பி உதயகுமார், அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர் ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திண்டுக்கல் அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான, முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விஸ்வநாதன் பேசியதாவது:- தமிழகத்தில் தற்போது மின் கட்டண உயர்வு காரணமாக விலைவாசிகள் உயர்ந்துள்ளது பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விளைவியர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

 

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் 10,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து விட்டு தற்போது அதில் ஏதோ குறைச்சுக்கிட்டு ஒரு 5000 இல்லாட்டி இன்னும் ஏதோ குறைச்சுக்கிட்டு ஒரு 2000 3000 கொடுக்கலாம் என்று ஒரு சினிமா படத்தில் நடிகை வடிவேல் ஒரு குழந்தையை கடத்தி விட்டு மொத 5 கோடி , 5 லட்சம் , ஒரு 5000 குடுங்கற மாதிரி ஏதோ வண்டி வாகனம் எல்லாம் வச்சு கடத்திருக்கோம் என்று மிகவும் நக்கலாக நகைச்சுவை செய்திருப்பார்.

 

அது போன்று இன்றைக்கு திமுக அரசு மக்களுக்கு இந்த அரசாங்கம் திமுக எதிர்க்கட்சியமாக இருந்தபோது கொடுக்கச் சொன்ன தொகையான பத்தாயிரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஏதோ ரூ.2000, ரூ.3000 மாதம் கொடுங்கப்பா தொகையில ஏதோ குறைச்சுக்கிட்டு கொஞ்சம் கூடுதலா கொடுத்த மக்கள் கொஞ்சம் விலைவாசி உயர்வுக்கு தகுந்த மாதிரி பொங்கல் பண்டிகையை சிறப்பா கொண்டாடுவாங்க என்று என்று நகைச்சுவையாக தமிழக அரசை கிண்டல் அடித்து பேசினார்.

 

இன்றைக்கு பல்வேறு வகையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போய் எங்கு பார்த்தாலும் என்ற செய்திகளை தான் பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது அராஜகம் செய்து வருகிறார்கள் திமுகவினர் என்று பேசினார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் தவமணி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், முனி ராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்க பாண்டியன், நிலக்கோட்டை நகர பொருளாளர் பூக்கடை சரவணன்,

 

முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணக்குமார், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சங்கையா, குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )