BREAKING NEWS

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா குத்தாலம் பேரூர் நகர திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. குத்தாலம் கடை வீதியில் பட்டாசு வெடித்தும் அங்கு உள்ள அண்ணா மற்றும் பெரியார் திருவுருவச் சிலைக்கும் கலைஞர் திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.

 

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் க.அன்பழகன்,பேரூர் செயலாளர் சம்சுதீன்,பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இளைஞரணி மாணவரணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

தொடர்ந்து 14 வது வார்டு திமுக சார்பில் டி.இ.எல்.சி.உதவிபெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு அட்டை,பேனா, பென்சில்,உள்ளிட்ட எழுதுபொருள் உபகரணங்கள் 80 மாணவர்களுக்கு மாவட்ட பிரதிநிதி உலகநாதன்,வார்டு செயலாளர் முருகேசன்,பொருளாளர் தென்னூர் வேந்தன்,உள்ளிட்டோர்
வழங்கினர்.

 

பின்னர் இராஜகோபாலபுரத்தில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மாணவர்களுக்கு எழுதுபொருள் உபகரணங்களை பேரூராட்சி மன்ற உறுப்பினர் சேகர்,ராதிகா சசிகுமார்,மற்றும் அச்சுதராமன், நாடிமுத்து,செந்தமிழ்செல்வன், பரந்தாமன்,காளிதாஸ்,சத்யா,உள்ளிட்டோர் வழங்கினர்.

 

CATEGORIES
TAGS