தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், புவனேஸ்வரி பேட்டை அருகே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா 24வது வார்டு செயலாளர், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் எஸ்.பார்த்திபன் தலைமையில், ஆர். ஆறுமுகம், கல்பனா முன்னிலையில் குடியாத்தம் திமுக நகர செயலாளர் மற்றும் சேர்மேன் சௌந்தர்ராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
முன்னாள் சேர்மேன் புவியரசி, அரசு வழக்கறிஞர் பாண்டியன், அவைத் தலைவர் ஜவகர், ஆர். ரவிசங்கர், துணைச் செயலாளர் ஜி .பழனி, பொருளாளர் எஸ். விஜயகுமார், என். ஏகாம்பரம், கே.என். உமா காந்தன், வி. வஜ்ஜிரவேல், என். வஜ்ஜிரவேல், என்.வரதராஜ், டி.பி. பசவராஜன் ஆகியோர் இந்த பிறந்த நாள் விழாவில் திமுக கட்சி கொடி ஏற்றி, சேலை, லுங்கி வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக இனிப்புகள் கொடுத்து கொண்டாடினர். திமுக பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்