தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். தஞ்சாவூரில் பேட்டி.

மின் கட்டணத்தை ஆதார் எண்ணுடன் உடனடியாக இணைப்பதைத் தமிழக அரசு மேற்கொள்வது ஏற்புடையதல்ல என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். தஞ்சாவூரில் பேட்டி.
தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியில்.
மின் கட்டணத்தை ஆதார் எண்ணுடன் இணைப்பது என்பது ஒன்றிய அரசின் உத்தரவு. அதை தமிழக அரசு சிரமேற்கொண்டு உடனடியாக இணைக்க முயற்சிப்பது ஏற்புடையதல்ல. இதன் மூலம் அதிக மின்சாரத்தை விவசாயிகள் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தினர் என ஒன்றிய அரசு மானியத்தை ரத்து செய்வதற்கான முன்னேற்பாடாகத்தான் இத்திட்டம் கருதப்படுகிறது.
மீட்டர் பொருத்தப்படுவதும் இதற்கான முன்னேற்பாடாக இருப்பதாகத் தெரிகிறது. ஒரு விவசாயி ஒரு மின் இணைப்புக்கு மேல் வைத்திருப்பதையும் பிடித்து, அதையும் துண்டிப்பதற்கான சூழ்ச்சியான நடவடிக்கையாக உள்ளது. இதற்கு தமிழக அரசு துணை போகக்கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள்.
தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு என்பது நீருபூத்த நெருப்பாக உள்ளது. அதை வெளிக்காட்டுகிற முகம்தான் 85 வயதைக் கடந்த திமுக பிரமுகரின் உயிர் தியாகம். நாங்கள் விரும்பி எந்த மொழியை வேண்டுமானாலும் கற்போம்.
ஆனால், ஹிந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என திணித்தால், அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என தெரிவித்தார்.