தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் மாதாந்திர கூட்டம் எருக்கட்டாஞ்சேரி சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் எஸ் ஆர் கார்த்திகேயன் தலைமையில் நடைப்பெற்றது.
சங்க செயலாளர் சந்தனசாமி வரவேற்று பேசினார். துணைத்தலைவர் குமார் அமைப்புச்செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் மாணிக்க அருண்குமார், மாவட்ட பிரதிநிதி கனகராஜ், தொழில்நுட்ப அணி செயலாளர் பிரகாஷ், முன்னிலையும் வகித்தனர்.
இக்கூட்டத்தில் திருச்சியில் நடந்த சாலைவிபத்தில் அகாலமரணம் அடைந்த தோகா சங்கதின் உறுப்பினர்கள் ஜெயபால், அரவிந்த், மணி ஆகிய மூவருக்கும் மௌன அஞ்சலியும், இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதில், செயற்குழுஉறுப்பினர்கள் பிரபு, வின்சென்ட் ஆறுமுகம், சரவணன், சுதாகர் மற்றும் சங்க உறுப்பினர்கள் சங்கத்திற்கான ஆலோசனைகளை வழங்கினர், கூட்டம் முடிவில் நந்தினி ஆடியோஸ் உரிமையாளர் அண்ணாதுரை நன்றி உரையாற்றினார்.