BREAKING NEWS

தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லைநகர் கே.வி.பி.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லைநகர் கே.வி.பி.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை பிரபலப்படுத்தவும், மரபு வழி சிலம்ப கலையினை மீண்டும் வருங்கால இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லைநகர் கே.வி.பி.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மறைந்த மருத்துவ வள்ளல் வி.ஜெயபால் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டியை திருச்சி மன்டல பாஸ்போட் அதிகாரி ஆர்.ஆனந்த் அவர்கள் சிலம்பம் சுற்றி துவங்கி வைத்தார்கள்.

 

ஆர்.பாஸ்கரன், டாக்டர் வி.செந்தில் ஆகியோர் டாக்டர் ஜெயபால் அவர்களின் படத்தினை திறந்து வைத்தனர்.

சிலம்பத்தில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பள்ளி மாணவி மோ.பி.சுகித்தா உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

 

குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுகம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்களின் ஒழுக்கம், வேகம், ஸ்டைல், ஆற்றல் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கி பதக்கங்கள் வழங்கப்பட்டன.

 

மழலையர், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்களது ஆற்றல்மிகு சிலம்பத் திறனை சக போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தி காட்டினர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் வீரர், வீராங்கணைகளுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 

இது மட்டுமின்றி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அவர்களின் இரு புதல்வர்களான பிரஜன் மினி சப்ஜூனியர் பிரிவிலும், மித்ரன் மினி கேடட் பிரிவில் பங்கேற்று சிலம்பம் விளையாடி பரிசுகளை தட்டிச் சென்றனர்.

 

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரன், திருச்சி மத்திய சிறைச்சாலை மேனேஜர் திருமுருகன், வழக்கரிஞர் திலீப், முனைவர். மாணிக்கம், உலக சிலம்ப இளையோர் சங்க தலைவர் ரவிச்சந்திரன், சாப்ட்வேர் கார்த்திக், பொருளாளர் எஸ். மணிகண்டன், உலக சிலம்ப இளையோர் சங்க செயலாளர் மோகன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

 

முதல் இடத்தை பிடித்து, ஒட்டு மொத்த சேம்பியன்ஷிப் கோப்பையை திருச்சி மன்னை மகாலிங்கம் சிலம்ப அணியும், மதுரை முத்துநாயகி அணியினர் இரண்டாம் இடத்தையும், லால்குடி வர்மம் போர்கல அணியினர் மூன்றாம் இடத்தையும் உலக சிலம்ப இளையோர் கழக தமிழ்நாடு அணியினர் நான்காம் இடத்தினையும் பெற்றனர்.

 

வெற்றி பெற்ற அனைவருக்கும் திருச்சி இரயில்வே எஸ்.பி. முனைவர்.த.செந்தில்குமார் அவர்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

 

CATEGORIES
TAGS