BREAKING NEWS

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் முழுமையாக சென்று சேர்க்க போக்குவரத்து தொழிலாளர்கள் துணை நிற்போம்! தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதியேற்பு!!

தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் முழுமையாக சென்று சேர்க்க போக்குவரத்து தொழிலாளர்கள்  துணை நிற்போம்! தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற  டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதியேற்பு!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனிப்பெரும் தலைவர், பல முறை ஆட்சி கண்ட முன்னாள் முதல்வர் ,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட மக்களுக்கு சேவை செய்யும் பல்வேறு துறைகளை உருவாக்கியவர், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பென்ஷன் திட்டம் கொண்டுவந்து நடைமுறைப் படுத்தியவர் என்பது உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு திட்டங்களுக்கும், தமிழ்நாடு அரசு, தமிழ் இன மக்கள் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் உரித்தான மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் தஞ்சாவூரில் இன்று பல்வேறு இடங்களில் எழுச்சியுடன் நடைபெற்றது . தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தொமுச நிர்வாகி ஆர். ஜெயவேல்முருகன் தலைமை வகித்தார். நிர்வாக பணியாளர் சங்கத்தின் மூத்த தலைவர் பி.ஜான்சன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக திமுக மாநகர செயலாளரும் ,தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி.நீலமேகம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இனிப்புகள் வழங்கினார். தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், ஓய்வு பெற்ற பெற்றோர் சங்கத்தின் தலைவர் என்.அன்புமணி, போக்குவரத்து சங்க நிர்வாகிகள் எஸ்.ஜெகதீசன், சகாயராஜ், வேலுமணி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . தஞ்சாவூர் ஜெபமாலை புரம் நகர பணிமனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தொமுச மத்திய சங்க துணைச் செயலாளர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். நிகழ்வில் நிர்வாகிகள் உ.கலியமூர்த்தி, டி.ரெங்கராஜ், ஆர். சரவணன் உ.ஜெயபால், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் நினைவு கொடியினை ஏற்றி தொழிலாளர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் தே.எட்வின்பாபு தலைமை வகித்தார். கிளைசெயலாளர் டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிஐடியூ சங்க நிர்வாகிகள் எஸ்.செங்குட்டுவன், ஜெ.வெங்கடேசன், தொமுச நிர்வாகிகள் ராஜசேகரன் , பாண்டியன், சரவணன், பாபு ராவ், ஆனந்தன், கேடிகே. முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அங்கு வைக்கப்பட்டிருந்த டாக்டர் கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செய்தனர். அப்பகுதி மக்களுக்கு பிறந்தநாளையொட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன. முடிவில் பொருளாளர் டி.திருமாறன் நன்றி கூறினார். தஞ்சாவூர் புறநகர் கிளை முன்பு நடைபெற்ற டாக்டர் கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் க.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சேகர் முன்னிலை வகித்தார் .டாக்டர் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்பகுதி மக்கள், தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

டாக்டர் கலைஞர் பிறந்த நாள் நிகழ்வில் தமிழ்நாடு அரசு அறிவிக்கின்ற மக்களுக்கு பயன் அளிக்கின்ற அத்தனை நலத்திட்டங்களையும் முழுமையாக மக்களுக்குச் சென்று சேர்க்கும் வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் உதவிடுவோம், துணை நிற்போம், பேருந்து பயணங்களில் பயணிகளிடம் கனிவாகவும், அன்பாகவும் நடந்து கொள்வோம், தமிழ் நாடு அரசுக்கும், பொதுமக்களுக்கும், போக்குவரத்து தொழிலாளர்கள் பாலமாக என்றும் துணை நிற்போம் என்று டாக்டர் கலைஞர் பிறந்த நாள் நிகழ்வில் உறுதி ஏற்றுக் கொண்டனர். செய்தி::: துரை. மதிவாணன். படவிளக்கம்: தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி .நீலமேகம் அவர்கள் டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழாவையொட்டி பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கிய போது எடுத்த படம். இது இரண்டாவது படம் தஞ்சை நகர கிளை முன்பு டாக்டர் கலைஞர் பிறந்த நாள் நினைவு கொடி ஏற்றிய போது எடுத்த படம்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )