தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் அவர்கள் இன்று மயிலாடுதுறையில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் ஞாயிறு அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் தொகுதி(TNPSC)IV தேர்வில் சுமார் 24,000 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் அவர்கள் சீர்காழிற்கு உட்பட்ட விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி, பெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி, விவேகானந்தா மகளிர் கல்லூரி, வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மைய கூடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.

அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டி நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், கல்லூரி முதல்வரிடமும் அறிவுறுத்தப்பட்டது. மேற்படி ஆய்வின்போது வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர் வட்டாட்சியர் சண்முகம், தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, வருவாய் ஆய்வாளர்கள் பார்வதி மற்றும் சுகன்யா உடனிருந்தனர்.
