BREAKING NEWS

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை தமிழக முதல்வர் தீர்வு காணவேண்டும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை தமிழக முதல்வர் தீர்வு காணவேண்டும்.

14வது ஊதிய ஒப்ந்த பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும் என கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாநில பொதுசெயலாளர் பத்மநாபன்
வலியுறுத்தல்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் 22வது பொதுகுழு கூட்டம் மண்டல தலைவர் கலைமுருகன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுசெயலாளர் பத்மநாபன், மாநில தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுசெயலாளர் பத்மநாபன் பேசுகையில்.2021ல் பிப்ரவரியில் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது பிரச்சனைகள் தீர்க்கப்படமால் இருந்தது.

அப்போதைய எதிர்கட்சி தலைவர் இன்றைய தமிழக முதல்வர் திமுக ஆட்சிக்கு வந்ததும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு 100நாட்களில் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார். அதனடிப்படையில் இன்னும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என எதிர்பார்த்து காத்துள்ளதாகவும்.

                                                                                                             14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக முடிக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 78மாத கால அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் மருத்துவபடி வழங்காமால் உள்ளனர் எனவே மருத்துவ காப்பீடு மாற்றும் மருத்துவபடியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் முன்னதாக மண்டல பொதுகுழுவின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது எதிர் வரும் காலத்தின் சங்கத்தின் வளர்ச்சிக்கான திட்டமிடல் குறித்து விவாதிக்கப்பட்டது பொதுக்குழுவில் ஈரோடு, கோவை, திருப்பூர் மண்டலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )