BREAKING NEWS

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அடிப்படையாக பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அடிப்படையாக பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அடிப்படையாக பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை! ஏஐடியூசி சுமைதூக்கும் தொழிலாளர் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் !! தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் 36 ஆவது ஆண்டு பேரவை கூட்டம் தஞ்சாவூரில் மாவட்ட சங்க அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணிக்கு சுமைதூக்கும் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சாமிக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் 36ஆவது பேரவை கொடியினை வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்றிவைத்தார். மாநில இணைப் பொதுச் செயலாளர் ஜெ.குணசேகரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார் .மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார் வேலைஅறிக்கை வாசித்தார் . வரவு செலவு அறிக்கையை மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன் சமர்ப்பித்தார். பேரவையில் இறந்த 23 தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வீதம் 2 லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது . விவசாயிகள் இயக்க தலைவர்கள் முத்து உத்ராபதி, பா.பாலசுந்தரம், முன்னாள் இளைஞர் பெருமன்ற தலைவர் மு.அ.பாரதி, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட தலைவர் வெ.சேவையா, அரசு போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர்கள் ஜி.கிருஷ்ணன், சி.பக்கிரிசாமி, அரசுப் பணியாளர் சங்க முன்னாள் தலைவர் என்.பாலசுப்பிர மணியன், நகர தொழிற்சங்க நிர்வாகி ஆர்.பிரபாகரன், தெருவியாபார தொழிலாளர் சங்க ஆர். பி.முத்துக்குமரன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க கவுரவத் தலைவர் கே.சுந்தரபாண்டியன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடிஸ்வரன் ஆட்டோ சங்க செயலாளர் ஆர்.செந்தில்நாதன் ஆகியோர் பேரவையை வாழ்த்தி பேசினார்கள். தீர்மானங்களை சங்க நிர்வாகிகள் கே.ராஜ்மோகன், ஜி.சுப்பிரமணியன், எஸ்.சிவானந்தம், கே.எஸ்.முருகேசன், எம்.எஸ்கிருஷ்ணன், சி. பாலையன், எஸ்.கணபதி, கே.ராஜேந்திரன், பி.அன்பழகன், கே. சரவணன், டி.அய்யப்பன் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தார்கள். முடிவில் மாநில செயலாளர் சி.சவுந்தரராஜன் நன்றியுரையாற்றினார். பேரவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நியாயமான கூலிக்காக பலகட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தற்போதைய தமிழ்நாடு அரசு மூட்டை ஒன்றுக்கு 3ரூபாய் 25 காசு என்று வழங்கப்பட்ட கூலியை ரூபாய் 10 ஆக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் , நெல் கொள்முதலில் ஆன்லைன் பதிவு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை ஒன்றிய அரசு புகுத்த முற்படுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

மாநில உரிமைகளுக்கு இடையூறின்றி, விவசாயிகள் நலன் பாதிக்கப்படாமல் வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படையாக, அர்ப்பணிப்புடன் சொற்ப கூலி பெற்றுக்கொண்டு பல்லாண்டு காலமாக பணியாற்றுகின்ற சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும், அவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், கொள்முதல் நிலையங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் மிகுந்த குறைபாடுகள் உள்ளது. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது .எனவே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் மின்கட்டணத்தை நிர்வாகமே பொறுப்பேற்று செயல்படுத்த வேண்டும், நெல் கொள்முதலில் ஈரப்பத தளர்வு கோரி மாநில அரசு மத்திய அரசுக்கு அனுமதி கோருவதும், நீண்ட நாட்கள் தாமதப்படுத்தி ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதும் ,அந்த காலகட்டத்தில் பருவநிலை மாறி ஈரப்பத தளர்வு தேவையில்லாத நிலை ஏற்படுகிறது. எனவே ஈரப்பத தளர்வு குறித்து முடிவெடுக்க நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிக்க ஒன்றிய,மாநில அரசை இப் பேரவை கேட்டுக்கொள்கிறது, திறந்தவெளி சேமிப்பு நிலையங்கள், கிடங்குகள், நவீன அரிசி ஆலைகளில் சுமைதூக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதனை கைவிட்டு இதற்கு முன்னர் செயல்படுத்தி வந்த அடிப்படையில் முறைப்படி நேரடி தொழிலாளி முறையை செயல்படுத்த வேண்டும், மூட்டைகளை ஏற்றி இறக்க அதற்கான கூலி டன் கணக்கில் கணக்கிட்டு கூலி வழங்குவது என்பது சிறிதும் பொருத்தமற்றதாகும், நியாயமற்றது ஆகும். திறந்தவெளி சேமிப்பு நிலையங்கள், கிடங்குகள் ,நவீன அரிசி ஆலைகளில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 5 ஏற்றி இறக்கும் கூலியாக வழங்க அரசை இப்பேரவை கேட்டுக்கொள்கிறது, பல நாட்கள் கொள்முதல் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு இயக்கம் செய்யும்போது பெரும் அளவிற்கு எடை குறைவு ஏற்படுகிறது. நியாயமற்ற முறையில் விஞ்ஞானத்திற்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத முறையில் பணியாளர்களிடம் கட்டாயப்படுத்தி லட்சக்கணக்கில் இழப்பு தொகை வசூலிக்கப்படுகிறது, உடனடியாக நிர்வாகம் இதனை கைவிட்டு நியாயமான முறையில் எடை இழப்பிற்கு அனுமதி வழங்க பேரவை கேட்டுக் கொள்கிறது, லாரிஎன்ற பெயரால் கொள்முதல் நிலையங்களில் லாரி டிரைவர்கள் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள பேரவை நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறது, நெல் கொள்முதலுக்கான முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாததால் ஒவ்வொரு பருவத்திலும் பல்வேறு கஷ்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே ஒவ்வொரு பருவத்திற்கும் முன்பே தெளிவாக திட்டமிட்டு, நெல் கொள்முதலுக்கு இடர்பாடுகள் இன்றி செயல்படுத்த ஆவண செய்ய தமிழ்நாடு அரசையும் நுகர் பொருள் வாணிப கழக நிர்வாகத்தையும் பேரவை வலியுறுத்துகிறது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )