BREAKING NEWS

தமிழ்நாடு வரலாற்று பேரவை 29 வது ஆண்டு கூட்டம் 14.10.2022 முதல் 16.10.2022 வரை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு வரலாற்று பேரவை 29 வது ஆண்டு கூட்டம் 14.10.2022 முதல் 16.10.2022 வரை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு வரலாற்று பேரவை 29 வது ஆண்டு கூட்டம் அ.வீரையா வாண்டையார் நினைவு புட்பம் கல்லூரி வரலாற்று துறை சார்பாக 14.10.2022 முதல் 16.10.2022 வரை நடத்தப்படுகிறது .

 

 

இதன் நோக்கம் தமிழ்நாடு வரலாற்று துறையின் முக்கியத்துவமும் அதன் பங்களிப்பும் மற்றும் இந்திய வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றி பல்வேறு கருத்தரங்குகளும், விவாதங்களும் நடத்தப்பட இருக்கிறது.

 

 

இதில் 350 க்கும் மேற்பட்ட பல்வேறு வரலாற்று துறை பேராசிரியர்களும், அறிஞர் பெருமக்களும், ஆராய்ச்சி மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய பழனி மாணிக்கம் அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

 

 

மாநாட்டிற்கு பேராசிரியர் கல்லூரி முதல்வர் R.சிவக்குமார் தலைமை ஏற்க,கல்லூரி கலைப்புல தலைவர் மற்றும் 29 வது ஆண்டு வரலாற்று பேரவையின் உள் செயலாளரும் வரலாற்று துறை பேராசிரியருமான V.ரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

 

 

இதில் வாழ்த்துரை வழங்குவதற்கு டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ஜெகதீசன் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். வரலாற்று பேரவையின் தலைவர் பேராசிரியர் ராஜவேலு அவர்கள் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

 

 

இவ்விழாவில் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் பாதுகாவலர் ராஜா முகமது அவர்கள் சிறந்த வரலாற்று அறிஞராக கவுரவிக்கப்பட்டார்.

 

 

 

இறுதியாக கல்லூரியின் வரலாற்று துறை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி அவர்கள் நன்றி தெரிவித்தார். இதில் 350 க்கும் மேற்பட்ட வரலாற்று அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )