தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தீவிரவாத நடவடிக்கை, பயங்கரவாத செயல்களுக்கு தமிழக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். தமிழகத்தில் தீவிரவாதம் விரட்டி அடிக்கப்படும்; அமைச்சர் கீதா ஜீவன்..
தூத்துக்குடி மாவட்டம்,
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறையுடன் தேசிய புலனாய்வு முகமை ஆரம்பம் முதலே இணைந்தே செயல்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி தாம் இந்த விளக்கத்தை அளிப்பதாக தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசியவர் கோவையில் 22 ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற உடன் அது கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கோவை ஆணையர்,தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி என பலரும் சில மணி நேரத்தில் சம்பவ நடைபெற்ற இடத்தில் சென்று நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் இறந்த நபர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பயங்கரவாதியோடு தொடர்புடைய கூட்டாளியும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 24 ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழக காவல்துறை இணைந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
தமிழக காவல்துறை இந்த சம்பவத்தில் தொடர்ந்து மத்திய புலனையுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறை தாமதமாக செயல்பட்டுள்ளது என்று சொல்வது சரியானது அல்ல என்று கூறினார்.
இந்த சம்பவம் மட்டுமின்றி தமிழக காவல்துறை தேசிய அளவிலான எந்த ஒரு பிரச்சனை என்றாலும் மத்திய புலனாய்வு அமைப்போடு இணைந்து செயல்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட விஷயத்தில் கூட தமிழக காவல்துறை தேசிய புலனாய்வுடன் இணைந்து செயல்பட்டதை அந்த அமைப்பே பாராட்டியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை வழக்கு பதிவு செய்து 26ஆம் தேதி இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
எனவே இந்த விஷயத்தில் 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அனைத்து தகவலும் தமிழக காவல்துறை தேசிய புலனாய்வு முகமை உடன் இணைந்து தமிழக காவல்துறை செயல்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக கையாண்டுள்ளது எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தீவிரவாத நடவடிக்கை, பயங்கரவாத செயல்களுக்கு தமிழக முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். தமிழகத்தில் தீவிரவாதம் விரட்டி அடிக்கப்படும் முறியடிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
பேட்டியின் போது, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.