தமிழ்நாட்டு கனிமவளங்களை மாநிலங்களுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும்; விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தேனி அருகே உள்ள வீரப்ப அய்யனார் கோவில் மீட்டிங் ஹாலில் தமிழ்நாடு அளவிலான விவசாயிகள் சங்க கூட்டம் ஏகே டிரஸ்ட் சார்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு டிரஸ்ட் நிறுவனர் அன்னக்கொடி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மணல் கல் உள்ளிட்ட கனிம வளங்கள் தமிழ்நாட்டில் இருந்து கேரளா ஆந்திரம் கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும், தமிழ்நாட்டு கனிம வளங்களை தமிழ்நாட்டிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வர்த்தக நோக்கத்தில் வெளி மாநிலங்களுக்கு லாபநோக்கத்திற்காக கடத்தப்படும்போது உள்நாட்டு நீர் வளங்களும், நில வளங்களும் பாதிக்கப்படுகின்றன.
மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது என கூட்டத்தில் விளக்கப்பட்டது. மேலும் கஸ்தூரிரங்கன் அறிக்கை கடந்த 2014ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.
முதல் தமிழ்நாடு கர்நாடகா கேரளா ஆந்திரா மாநிலங்களின் வனப்பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இதை தடுக்க விவசாயிகளை ஒருங்கிணைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் ரசாயனங்கள் அதிகமாக விலைநிலங்களில் பயன்படுத்தப்பட்ட வரும் தற்போதைய நிலையில் ரசாயனகளை குறைத்து இயற்கை விவசாயத்தை மேம்படுத்த திருமணம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக இயற்கை உரங்களை குறித்த விழிப்புணர்வும் உற்பத்தி முறையும் குறித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இயற்கை விவசாயம் மேற்கொள்வதற்கு உதவியாக பாரம்பரிய நெல் உள்ளிட்ட விவசாயத்திற்கான விதைகளையும் தேவைப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக ஏகே டிரஸ்ட் மூலம் வழங்கவும் உறுதி கூறப்பட்டது .
இந்த கூட்டத்தில் தேனி மதுரை திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.