BREAKING NEWS

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

இவ்வாண்டு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கிய கூட்டத்தில் முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த போதே ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை அவமதிப்பு செய்யும் விதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் தமிழ்நாட்டு தலைவர்களை புறக்கணிப்பு செய்வதாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

இந்நிலையில் இன்று தேனியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பாக ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ரவி தமிழ்நாடு என்ற வார்த்தையை புறக்கணித்து தமிழகம் என்று கூறி தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் மேலும் தமிழ்நாட்டு தலைவர்கள் பெயரை சட்டமன்றத்தில் கூற மறுப்பதாகவும் எனவே தமிழ்நாட்டு ஆளுநர் ரவியை திரும்பப் பெற கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏறாளமானோர் கலந்து கொண்டு ஆளுநர் ரவிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

CATEGORIES
TAGS