தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் நிர்வாகியும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர், இரா.யோகுதாஸ்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் நிர்வாகியும் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14-வது பிஷப் தேர்தல் திருச்சியில் கடந்த மாதம் நடைபெற்றது எனவும்,
ஐகோர்ட் உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகியும் ஓய்வு பெற்ற நீதி அரசர் பால் வசந்தகுமார் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழுவினர் நியமிக்கப்பட்டு திருச்சபையின் 14-ஆம் பேராயர் தேர்தல் நடைபெற்றது எனவும் இந்த தேர்தலில் திருச்சியின் மறை மாவட்டங்களை சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர் இதில் மறைதிரு முனைவர் கிறிஸ்டியன் சாம்ராஜ் 14-ஆம் பேராயராக தேர்வு செய்யப்பட்டார் எனவும்,
வரும் ஜனவரி 14-ஆம் தேதி தரங்கம்பாடியில் உள்ள புது எருசலேம் ஆலயத்தில் பேராயர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதிலிருந்தும் பேராயர்கள் மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உட்பட அரசியல் பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.