BREAKING NEWS

தரங்கம்பாடியில் பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்.

தரங்கம்பாடியில் பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தரங்கம்பாடி பேரூர் செயலாளர் கே.முத்துராஜா ஏற்பாட்டில், தரங்கை பேரூர் கழக அவைத் தலைவர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

 

திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாநில விவசாய அணி இணை செயலாளர் அருள்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல் மாலிக், பி.எம். அன்பழகன், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.சி.என்.விஜயன், எம்.எம்.சித்திக், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

 

 

இதில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கழகத்தின் 15 -வது அமைப்பு பேரூர் கழக புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தும், கட்சி ஆக்க பணிகள் குறித்தும் பேசினர்.

 

கூட்டத்தில், மாவட்ட பிரதிநிதிகள் பொன்.ராஜேந்திரன், ஆ.சடகோபன், துணை செயலாளர்கள் பால்ராஜ், மதியழகன், அம்பிகா பிரபு, பொருளாளர் நந்தா (எ) கண்ணதாசன், ஒன்றிய பிரதிநிதிகள் வீரமணி, இக்பால், கே.ராஜா, ஏ.கே.சந்துரு, தேவன் (எ)செந்தில்குமார், மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியின் 18 வார்டு செயலாளர், நிர்வாகிகள், பிரதிநிதிகள், பேரூராட்சி மன்ற திமுக கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள், தொ.மு.ச. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS