BREAKING NEWS

தரங்கம்பாடி, ஜூலை .5: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 19 மீனவ கிராமங்கள் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தரங்கம்பாடி, ஜூலை .5: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 19 மீனவ கிராமங்கள் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை மீனவ கிராம தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, தாழம் பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர்குப்பம், மேலமூவர்கரை, சாவடிகுப்பம், கீழமூவர்கரை, தொடுவாய், சின்னகொட்டாய்மேடு, கூழையார், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 19 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்கு மடி வலை, இரட்டை மடிவலை, அதிவேக இஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை கொண்டு மீன் பிடிக்கும் தொழிலை முற்றிலும் தடை செய்ய வேண்டும்,

மேலும் தடை செய்யப்பட்டுள்ள தெற்கு மடிவலை, இரட்டை மடிவலை, அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை கொண்டு மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபட்டால் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் கிராமங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தொடர் ஆர்ப்பாட்டம், தொடர் உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

கடலூர் மாவட்ட மீனவர் கிராமங்கள் சுருக்குவலைகளை தடை செய்வதற்கு வேண்டுகோள் வைக்கும் பட்சத்தில் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )